வா தமிழா தமிழில் பேசுவோம்

 —
Rating
Likes Talking Checkins
229 0
About தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ் நாடு. தமிழ் ஈழம்.
Description தமிழர்கள் நாம் அனைவரும் தமிழில் ஆங்கில கலப்பை எதிர்க்க வேண்டும் என்றும்... ஆங்கில கலப்பு இல்லாமல் தூய தமிழில் நாம் அனைவரும் பேச வேண்டிய அவசியத்தை உணர்த்துவதே இந்த பக்கத்தின் நோக்கமாகும்

இன்றைக்கு நாம் தமிழர்கள் பேசும் மொழி தமிழ் அல்ல அது தங்க்லீஷ் (THANGLISH) என்னும் ஆங்கில கலப்புள்ள தமிழை பேசிவருகிறோம் ! பேச்சு வழக்கில் தமிழ் மொழி அழிந்துவிட்டது என்ற உண்மையை நாம் தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும். சற்று சிந்திதோமானால் நாம் பேசும் தமிழ்மொழியில் தொண்ணூறு சதவிதம் ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசிவருகிறோம் என்று உண்மையை நாம் உணரலாம். வெறும் ஏடுகளில் மட்டுமே தமிழ் தூய்மையாக இருக்கிறது.

தமிழுக்கு என்ன குறை?? சொற்கள் குறைவா ? இல்ல வார்த்தைகள் குறைவா? ஒரு மொழிக்கு தேவையான அனைத்து சிறப்புகளையும் பெற்றுள்ளது தமிழ்.

ஆனால் நாம் அனைவரும் தமிழை தாழ்வாகவும் ஆங்கிலத்தை உயர்வாகவும் பார்க்கிறோம். உண்மை அதுவல்ல... நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைப்பெற்றோம் ஆனால் அவர்களின் மொழியான ஆங்கிலத்திற்கு அடிமையகிவிட்டோம்.

ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழியே, அது அறிவியல் அல்ல!!

ரஷ்ய, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்காட்லான்ட், ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற வளர்ந்த நாடுகளில் ஆங்கிலம் பயன்படுத்துவதில்லை.

தங்க்லீஷ் ( THANGLISH) என்னும் கலப்பு மொழியாக மாறி வரும் தமிழ் மொழி இன்னும் இருபது ஆண்டுகளில் ஆழிந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆகவே தூய தமிழை மீண்டும் தமிழர்களின் நாவில் உயிர்பெற செய்வதே இப்பக்கத்தின் நோக்கம் ஆகும்.
Share

Reviews and rating

Avatar
Rate this society / culture website